பாரதியின் கனவு நகரம் “வேதபுரம்” மக்களினதைப் போல் எமது எதிர்காலம் மிளிர வேண்டும்

– க. திருக்குமாரன்

டக்கு-கிழக்கு மக்கள் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு”, மற்றும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் #3” என வாக்களிக்க வேண்டும்:

Nalla Kaalam Cover

பாரதியின் கனவு நகரம் “வேதபுரம்” மக்களினதைப் போல் எமது எதிர்காலம் மிளிர வேண்டும்:

“வேதபுரம்: வாழ்வியலே விருத்தியாக்கிடும் வளமான வணிகத்தின் வீற்றிடம்:”

மகாகவி சுப்பிரமணிய பாரதி. இந்தப் பெயரினை கேட்டவுடன் எழும் எண்ணங்கள் தேச விடுதலையின் போது கவிஞனாகவும், பத்திரிகையாளனாகவும் இருந்து பாரதி படைத்தவை.

இருப்பினும் எக்காலத்திற்கும் – எந்த இடத்திற்கும் பொருந்தி நிற்கும் பாரதி கவிதைகள் எழுந்தது, அந்த மகாகவியினுள் இருந்ததனனைப் போன்ற “ஊற்று” வேறு அதே காலத்தைய தமிழ்ப் புலமை வாய்ந்தோரிடம் இருக்கவில்லை என்பதனால் என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறியிருக்கின்றார்.

கவியரசு வைரமுத்து பாரதி 800 ஆண்டுகள் தவமிருந்து பெற்றெடுக்கப்பட்ட தமிழ்க் கவி என்கிறார். மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் பாரதி பற்றிக் கூறுகையில், அந்த மகாகவியின் தேச பக்தி, தெய்வ பக்தி, சமூக சிந்தனைகள், பெண்ணியக் கருத்துக்கள், அவருடைய பன்முக ஆற்றல் என்பன தனக்கு மிகவும் வியப்பளித்தவையாகவே இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

ராஜ்குமார் பாரதி குரலில் “நல்ல கால வருகுது

பாரதியின் கவிதைகளில் பலவும் இலங்கைத் தமிழ் அரசியல்-சமூக நீரோட்டங்களினை அன்றும், இன்றும் – என்றும் தொட்டுச் செல்பவை. இவற்றுள் இன்று குறிப்பாக 2015 இன் பொதுத் தேர்தல் சூழலில், “எமது எதிர்காலம், எமது கையில்” என்ற குறிக்கோள் வாசகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைமைப்பு – யாழ் மாவட்ட இலக்கம் 3 வேட்பாளாராக நிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம் ஏ. சுமந்திரன் பன்முகப்படுத்தும் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு உகந்த பாரதி கவிதை “நல்ல காலம் வருகுது” என்று நினைக்கின்றேன்.

“நல்ல காலம் வருகுது” பாடலின் கருத்தியலினை அந்தக் காலத்து மக்கள் எற்றுக்கொள்ளும் வழி அரூடமாக ஒரு குடுகுடுப்பைக்காரரிடமிருந்து வருவது போல் பாரதி இந்தப் பாடலினை எழுதியுள்ளார்.

:இந்தக் கவிதையில் பாரதி முன்னுதாரணமாகக் கிரகித்த “வேதபுரம்” என்னும் நகரம் அவரின் காலத்திற்கு எவ்வளவோ பிந்தியது. நிலப்பிரபுத்துவ, மிகவும் பழமை வாய்ந்த சமூக சிந்தனையுடன் தான் வாழ்ந்திருந்த காலத்திலிருந்தும் மிகவும் முன்னோக்கியதாக பாரதி “நல்ல காலம் வருகுது” என்று அந்த மக்களுக்கு ஆரூடம் தெரிவித்திருந்தார்.

“வேதபுரம்” மக்களினதைப் போன்ற வாழ்வியல் – எது எப்படி, எத்தகையதோர் பின் புலத்தில் உருவாக முடியும் என்று பாரதி கண்ட கனவு இன்றும் எங்கும் பொருந்துவதாக உள்ளது.

ஏன், கனடா-ஒன்ராரியோ மாகாணத்தின் ரொறொன்டோ மாநகரில் இருந்து கிழக்குப் புறமாக 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “United Counties of Leeds and Grenville” என்ற பிரதேசத்தின் முக்கிய நோக்கத்தைக் குறிக்கும் வாக்கியம் “Where Lifestyle Grows Good Business” என்பதாகும். இதன் பொருள் “வாழ்வியலே விருத்தியாக்கிடும் வளமான வணிகத்தின் வீற்றிடம்” என்பதாகும்.

இன்று துப்பாக்கி சண்டைகள் – பாராதி வரிகளில் கூறுவதாயின் “தொலைந்து போயுள்ள” இலங்கையில், திரு. சுமந்திரன் முன்னெடுக்கும் அரசியல் முனைப்புக்கள் பாரதியின் “நல்ல காலம் வருகுது” பாடல் வரிகளிலேயும் தொக்கு நிற்கின்றன.

“நேத்திரம் திறக்குது – நியாயம் தெரியுது” என்ற வரிகளுடன் “தர்மம் பெருகுது” என்ற வரிகளுடன் முடியும் பாடல் வாழ்வியல் “தன்னிறைவு” என்பதன் ஊடாகப் பயணிக்கிறது. இந்த வேதபுரம் நோக்கியிருந்தது போன்ற வாழ்வியல் இலக்கினை கடைக் கொண்டு அடைவது போன்றதே “எமது எதிர்காலம், எமது கையில்” என்ற திரு. எம்.ஏ. சுமந்திர னின் அரசியல் முனைப்பும் ஆகும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் இந்த “நல்ல காலம் வருகுது ” பாடல் தரும் சிந்தனைகளுக்கு யாழ் தேர்தல் மாவட்டத்தில் இவ் ஒகஸ்ட் 17, 2015 பொதுத் தேர்தலில் வடிவம் தந்துள்ள திரு. எம். ஏ. சுமந்திரன் வெற்றிக்கே வாக்களிப்பு இடம்பெற வேண்டும், இடம்பெறும்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் எங்கனும் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) எம். ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” “வீடு”, “இலக்கம் 3” என்று வாக்களிப்பீர், பாரதி அபிமான நெஞ்சங்களே!

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது; நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்லகுறி சொல்லு.

தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்.
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது, வளருது;
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி!
குடுகுடு குடுகுடு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது, பாவந் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது; 25

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
சொல்லடி, சக்தி, மலையாள பகவதி!
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

Slide1

Slide2

Slide3

Slide4

Slide5

Slide6

Slide7

Translation from Bharathiyar’s “New Buffoon” (புதிய கோணங்கி) | Poem of a Palm reading fortune teller, carrying a “குடுகுடுப்பை” ~ Visiting residents of Vethapuram | Bharathiyaar envisions today’s world during his feudal times.

Good times awaiting
Good times awaiting
Awaiting awaiting
Good times awaiting

Ethnicities embrace
Wars windup
Sakthi and Ma-Kali
Tell it all
Read their palms and tell of good fortunes
Awaiting residents of Vethapuram

Good times awaiting
Awaiting awaiting
Good times awaiting

Poverty destroyed
Wealth swells
Learning upturns
Sins purged
White collar crimes
Criminals tossed away
With their squawks of “Aiyo”

Good times awaiting
Awaiting awaiting
Good times awaiting

Businesses boom in Vethapuram
Job creations soar
Living wage earners come to life
Art and Sciences advance
Technology transcends
Machines multiply
Entrepreneurs expand and grow
Scriptures spread and spread
Clergy dares anew
Obese lean
Vigor sprouts
Flourishing escalates in eight directions
Free of fear
Evils evaporate
Dogmas develop
Castetism chastens
Eye opens seeing
Emerging Justice
Conservative fads abruptly become enlightened
Boldness enter
Glory reigns
Isn’t it Sakthi, the Malayala Bagavathi Amman

Benevolence bustles
Benevolence bustles

Good times awaiting
Awaiting awaiting
Good times awaiting

– Subramaniya Bharathiyaar (1882-1921) Poem translated by K. Thirukumaran

(“குடுகுடுப்பை” is a drum like instrument, small hand held and often narrow median, where the player grips it)

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page