வடக்கு-கிழக்கு மக்கள் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு”, மற்றும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் #3” என்றே வாக்களிப்பார்கள்

க. திருக்குமாரன் | நிலமகள் சனசமூக நிலையம்

“‘தேசியம்’ எனப்படுவது ஒரு மிகப் பெரிய ‘நீர்த்தேக்கம்’ போன்றது:

வடக்கு-கிழக்கு மக்கள் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு”, மற்றும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”,
“இலக்கம் #3” என வாக்களிக்க வேண்டும்.

MAS JU

இந்தத் தேர்தலின் தமிழ், வடக்கு-கிழக்கு வாக்குகள் – உடனடி-நீண்ட தூர வாழ்வியல், அதே நேரம், ஐ.நா விசாரணை, மற்றும் அரசியல் தீர்வு என்ற வடிவத்திலான “தமிழ் தேசியம்” என்பதனைத் தாங்கி நிற்கும் “வீடு” சின்னத்துக்கே!

“தேசியம்” எனப்படுவது ஒரு மிகப் பெரிய “நீர்த்தேக்கம்” போன்றது என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்-சமூகவியல் விஞ்ஞான பேரசிரியர் ஜயதேவ உயங்கொட. இந்த “நீர்த்தேக்கத்தில்” பல ” தேசிய” வடிவங்களுக்கும் இடம் உண்டு என்பது சர்வதேச புகழ் மிக்க அரசியலமைப்பு சட்ட நிபுணரான பேரசிரியர் ஜயதேவ உயங்கொட கூறும் விளக்கம்.

ஆனால் தனதே “தமிழ் தேசியம்” என்பதன் தனி ஒரு வடிவம் – என்று கூறி அதன் வாரிசு ஆகவும் காட்டி வருகின்றார் “இரு கட்சிகளின் – ஒரு தலைவர்” கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவருக்கு துதி பாடுவோரும் வரையறுக்கும், “தேசியம்” – புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளுடனான உடனடி தாயகப் பங்களிப்புக்களினை, பரந்துபட்ட முறையில் வடக்கு-கிழக்கு மக்களின் கல்வி-வாழ்வாதாரப் பணிகளுக்கும் செய்யப்படுவதனை எதிர்க்கிறது. ஒரு சில புலம் பெயர்ந்த தமிழர்களும், ஒரு சில அமைப்புக்களும் “இரு கட்சிகளின் ஒரு தலைவரின் மூலம் “இன அழிப்பின்” பெயரில் உருவகித்துப் பிரதிநித்துவம் செய்யும் “தமிழ்த் தேசியம்” என்பதன் சுயநல “எதிர் அரசியல்” அதுவே.

ஆனால் புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ் உறவுகள் பெற்றுக்கொண்டுள தன்னார்வ – தொண்டு நிலைப்பாடுகள், தொழில் திறன், கல்வி மற்றும் மூலதனம் என்பன தாயக வடக்கு-கிழக்கு மக்களின் தொலை நோக்கிய இருப்பினை தக்க வைத்துக் கொள்ள, தென்னிலங்கை அரசுடன் அது குறித்து புரிந்துணர்வு ஏற்படுத்துவதன் மூலமே செய்து கொள்ள முடியும்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரு. சுமந்திரன் அவர்களின் பிரதிநித்துவம் மூலம் லண்டனில் புலம் பெயர்ந்த தமிழர்ககள் வடக்கு-கிழக்கில் கட்டுமான உதவிகள் செய்வதனையும் ஆராய்ந்த போது, “அது தேவையில்லை, வடக்கு-கிழக்கு மக்களினை சர்வதேசம் வந்து காப்பற்றும் வரை எந்த வித முன்னேற்றமும் இல்லாதும் வைத்திருந்து விட வேண்டும்” என புலம் பெயர்ந்த சமூகத்தின் ஒரு சில ஊடகங்களில் வந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரின் அணியில் உள்ள ஒரு சிலரும் திரும்பத் திரும்பப் பிதற்றினார்கள்.

“யான் பெற்ற இன்பம் – பெறுக இவ் வையகம்” என்பதற்கு இவர்கள் விதிவிலக்கு.

இவ்வளவுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்னணி உறுப்பினர்கள் புலம் பெயர் தேசம் மற்றும் தென்னிலங்கை கட்டமைப்புக்கள் மூலம் தமது கல்வி-தொழில்-வாழ்வியல் நிலைகளினை உருவகுத்துக் கொண்டவர்களே. இவ்வாறான நிலை, வடக்கு-கிழக்கு மக்களுக்கும் கிடைத்து விடுவதில், அவர்கள் காலம் தாழ்த்திப் பொறுத்திட வேண்டும் அல்லது மறந்திடக் கடவது என்பதே தனது “தேசியம்” என திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்யும் வரையறை – அதன் ஏது எது?

இதற்கு துணை போகவென தேர்தல் களத்தில் உள்ள உதிரிக் கட்சிகள் அனைத்தும் மற்றும் ஒரு சொற்ப புலம் பெயர் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையாளப் படுத்தும் “வீடு” சின்னத்தின் “தமிழ் தேசியம்” என்பதன் வாக்குகளினை சிதறடிப்பதனையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

இதனால் “தமிழர் தேர்தலினால் மகிந்த முன்னேற்றுமணி” உரிமை கொண்டாடும் “சைக்கிள் தேசியம்” – வடக்கு, கிழக்கு தமிழர்களின் தொடரும் துன்பியல் இருள் ஒன்றினாலேயே சுயநிர்ணய வெளிச்சத்தினை சர்வதேசம் பெற்றுத் தரும் என்ற வடிவம் நிராகரிக்கப்படும்.

சதிகளினையும், சுயநலங்களினையும் புறம்தள்ளி வடக்கு-கிழக்கு மக்கள் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு”, மற்றும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் திரு. எம். ஏ. சுமந்திரன் – “வீடு”, “இலக்கம் #3” என்றே வாக்களிப்பார்கள்.

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page