மரணித்த தமிழ் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில் உண்மை மக்கள் தொண்டனாக செயற்படுபவர்களே சுவாமி விவேகானந்தர் வாசகத்தின்படி மிளிர்கின்றனர்

– க. திருக்குமாரன் | நிலமகள் சனசமூக நிலையம்

“யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால் நல்ல தொண்டனாக இருப்பது கடினம்” _ சுவாமி விவேகானந்தர்

மே 18 நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் கலந்து ஏன் கொள்ளவில்லை என எள்ளன அறிக்கை ஒன்று “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

Thondan Swami Vivekananda Quote

அதனை மறுதலிக்கும் பொருட்டே சுவாமி விவேகானந்தரினை மேற்கோள்காட்டி, திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் அரசியல் சாயம் போடப்பட்ட மே 18 “பொது அஞ்சலி” நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதமை போற்றத்தக்கது என பின்வரும் எனது தனிப்பட்ட கருத்தினைப் பதிவு செய்கின்றேன்:

வடக்கு – கிழக்கில் தமிழ் தலைமை அரசியல்வாதிகள் சிலர் மே 18-19 தொடர்பில் நிகழ்த்தியது துன்பியல் நாளுக்கான அஞ்சலியாகவோ அல்லது இனப்படுகொலை கண்டனமாகவோ இன்றி, வெறும் தமது கட்சிகள், தாம் செய்த, செய்து கொண்டிருக்கும் “தமிழ் தேசியம்” என்பதற்கு தாமே உரிமையாளன் என்பதனை முரசறையும் சுயலாப அரசியல் நிகழ்வாகவே நடாத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசின் இனப்படுகொலையில் அழித்தொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான பொதுமக்களின் உயிர்களினை அவமதிக்கும் பச்சோந்தித்தனமாகவே இது அரங்கேறியுள்ளது.

பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் மரணித்த முள்ளிவாய்க்கால் உட்பட்ட மற்றும் வடமராட்சியிலும் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு போன்ற அதே வடிவிலான பந்ததிற்கு தீ மூட்டும் நிகழ்வுகளினை நடாத்தியுள்ளனர்.

படுகொலை செய்யபட்டது வெள்ளைக் கொடி ஏந்திய விடுதலலைப் புலி வீரர்களும்தான். அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றுவதற்கு மாவீரர் தினம் கார்த்திகையில் வருகிறது. இல்லை மே மாதத்திலும் முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடர் ஏற்ற வேண்டும் என முன் நிற்போர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் (Revisiting Sri Lanka’s Bloody War http://www.nytimes.com/2012/03/03/opinion/revisiting-sri-lankas-bloody-war.html?_r=0) விடுதலைப் புலிகள் தொடர்பிலான குற்றங்களினை தாம் பொறுபேற்பார்களா?

புலவர் தருமி “திருவிளையாடல்” இல், “பாடலில் எவ்வளவுக்கு எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொள்ளுங்களேன்” என்பது போல் கூட இல்லாமல், “பாடலில் குறை இருந்தாலும் பரிசுத் தொகை முழுவதையும் கோருகிறோம்” – ஐ:நா நிபுணர் நிலைப்பாட்டினை புறம் தள்ளி அரசியல் செய்வோர் நடவடிக்கைகள் பல, புறநிகழ்வுகள் பற்றித் தமக்கு கரிசனை இல்லை என்பதனைப் போலவே முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னர் 2009 இலும் மேற்குலக புலம்பெயர் தமிழர் வீதிப் போராடங்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டதாய் இடம்பெற்றதாக சில தரப்பினர் அன்றும், இன்றும் குறை கூறுகின்றனர்.

Thondan Swami Vivekananda Quote2

மரணித்த தமிழ் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில் உண்மை மக்கள் தொண்டனாக செயற்படுபவர்களே சுவாமி விவேகானந்தர் வாசகத்தின்படி மிளிர்கின்றனர்.

“ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” என்ற பெயரிலான அமைப்பில் “ஜனாதிபதி” என்ற சொல் இல்லாததனாலோ என்னவோ, ஜனாதிபதி ஒபாமாவின் இராஜங்க செயலாளர் ஜோன் கெரி மே 2ஆம் திகதி கொழும்பில் உள்ளடக்கிய போருக்குப் பின்னரான முன்னுதாரண மீள் எழுச்சி பெற்றுள்ள கார்த்திகா என்கிற தமிழ் இந்து இளம் பெண்ணினை- உலகெங்கினும் அராஜகங்களுக்கு மத்தியில் வாழும் இளைஞர்-யுவதிகளுக்கு அவர்கள் தமது இன்னல்களில் இருந்து மீண்டெழும் புத்துயிர் வடிவமாக போற்றப்பட்டிருப்பது தெரிவதில்லைப் போலும்! எனேனில், இராஜங்க செயளாளர் ஜோன் கெரி “அராஜகமாக” இங்கு சுட்டிக்காட்டுவது, கார்த்திகா 14 வயதில் பலவந்தமாக விடுதலைப் புலிகளில் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி, போரில் ஒரு கண் பார்வையியினை இழந்தும், 11 வருடங்கள் குடும்பத்தினருக்கு கார்த்திகா பற்றி எதுவும் தெரியாதிருந்தது எனவும் கூறியுள்ளார். (Strengthening the U.S.-Sri Lanka Partnership for Human Rights and Lasting Peace: Remarks by Secretary of State John Kerry: http://srilanka.usembassy.gov/sp-2may2015-2.html)

ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் இராசபக்ச அரசின் பிடியில் தமிழர் சந்தித்த அதீத கொடுமைகள் பற்றி எதுவும் ஏன் அங்கு உதாரணம் காட்ட வில்ல என “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” கேள்விக் கணைகள்-கண்டனங்கள்-அறிக்கைகள் விட்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் புதிய அரசு மே 18இனை “யுத்த வெற்றி நாள்” என்பதில் இருந்து அதனை எல்லோருக்கும் பொதுவான “நினைவு நாள்” என மாற்றியுள்ளது. இது ஒரு சிலரின் தூற்றல் – துரோகி – கொடும்பாவி எரிப்பு என்பவற்றினையும் பொருட்படுத்தாது, “மரணித்தவர்களுக்கு நீதி” என்பது மட்டுமின்றி, “போரில் இருந்து மீண்டவர்களுக்கான வாழ்வியல், வாழ்வாதார, சுயமரியாதை என்பன பெறுவதற்கான உரிமை” என்பதனையும் முதன்மையாக கொண்டு திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோர் மேற்கொண்டுவரும் துணிகர தலைமைத்துவத்தினால் கிடைக்கப்பெற்ற மாற்றம்!

இந்த மாற்றத்தினாலேயே முன்னரினை விட பகிரங்கமாகவே 2015 இன் மே 18 நிகழ்வுகள் சில ஈகைச் சுடர் ஏற்றுதலினை ஒத்ததாக கூட – மே 18 நிகழ்வுகள் விடயத்தில் நீதிமன்ற தடை உத்தரவு – சில நிபந்தனைகளுடனான தடை இருந்தும் – அவை நடந்து முடிய ஏதுவானது. (New government more conciliatory, but processions, protests still banned: http://www.ucanews.com/…/sri-lanka-tamils-openly-reme…/73614)

தமிழ் தலைவர்கள் எவரினையும், நீதி மன்ற தடை உத்தரவுகள் மீறும் போது விசாரணை செய்யாத மைத்திரி அரசு, கோத்தபாய இராசபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து, இலஞ்ச ஊழல் அலுவலகம் முன் நீதி மன்ற தடையினயும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களினை விசாரித்தது ஏன் என மகிந்த இராசபக்ச தரப்பினர் வினவுகின்றனர்.

இந்த மாற்றம் தமது அரசியல் தலைமையினால் வந்தது எனத் தம்பட்டம் அடித்து மே 18 “பொது” நிகழ்வுகளில் திரு. சம்பந்தனோ, திரு. சுமந்திரனோ கலந்து கொள்ளவில்லை. மாறாக ஏனைய “தலைவர்கள்” படச் சந்தர்ப்பவாதத்தினை நழுவ விடாமல் விளக்கேற்றி புலம்பெயர்ந்த ஊடகங்களில் உலா விட்டுள்ளனர்.
இவ்வாறான புறச் சூழல்களில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களினை வெறும் அரசியல்-“தமிழ் தேசிய” உணர்வு பூர்வமானதாக மட்டுமின்றி, வடக்கு-கிழக்கில் மேலும் அழிவுகள்-கெடுபிடிகள் வராமல் தலமைத்துவம் அளிக்கும் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் ஆகியோரினை வாக்காளர்கள் புறந்தள்ளப் போவதில்லை.

இதற்கிடையில் மே 17 – 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சம்பூர் மக்கள் மீள தமது கிராமங்களுக்கு செல்வது தொடர்பில் சம்பூருக்கும் – கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் பயணித்துக் கருமமாற்ற வேண்டிய சட்ட வேலைப் பணிகளும் திரு. சுமந்திரனுக்கு இருந்திருப்பது அங்கிருந்து வரும் செய்தி-நிலவரங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

மக்களுக்கு விடிவு வேண்டும் என நேர்மையாக, ஆணித்தரமாக அரசியல் செய்யும் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமந்திரன் போன்ற தலைவர்கள் நீதிமன்ற தடை உத்தரவுகளினை புறம் தள்ளி, பன்முக நிலவரங்களினையும் கருத்தில் கொள்ளாது “கடைத் தேங்காயோ, வழிப் பிள்ளயாரோ” என்பது போல் நடந்து கொள்ளப்போவதில்லை. அவ்வாறான தடைகளினை கருத்தில் எடுக்காது உடைக்கும் தமிழ் தலைமைகள், பின்னர் இலங்கை நீதி ஆணைகளினையும் மீறும் இராசபக்ச தரப்பினரினை தண்டிக்கும்படி எவ்வாறு கோருவார்கள்?

சட்டம்-ஒழுங்கு வடக்கு-கிழக்கில் எவ்வளவு துரிதமாக சீர்குலையும், அதனை சாதகமாக்கி தமிழ் மக்களிற்க்கு பாதகமான நிலைகளினை எற்படுத்திவிடலாம் என கூட்டத்தில் “கோவிந்தா கோவிந்தா” என்று சத்தமிட்டு களமிறங்க பலர் ஆவலாய் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் “ஆர்ப்பாட்டம்” ஒன்றின் போது யாழ் நீதிமன்றம் சேதப்படுத்தப்ட்டது, “தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்கிறார் மகிந்த இராசபக்ச. ஒமோம், இவற்றினைக் காரணம் காட்டி, இராணுவக் கெடுபிடிகளினை அதிகரித்து விடுவார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஆமோதித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன்.
யாழ் பல்கலைக்கழக உளநல பேராசிரியர் தயா சேமாசுந்தரம் அதே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் சமூக மற்றும் கல்வி, மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள் துரிதில் மீள கட்டியெழுப்பப்படுவது காலத்தின் கட்டாயம் எனச் சுட்டிக்காடியுள்ளார். (Post-War Systemic Breakdown Blamed For Jaffna Rape and Mayhem http://www.newindianexpress.com/…/…/05/22/article2827962.ece)

இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்க்கு தலைமைத்துவ மதிப்பு அளித்துள்ளமையே திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் வழங்கும் முன்னுதாரணம்.

போரில் இருந்து மீண்ட அன்னை திருமதி. ஜெயகுமாரியினை விடுதலை செய்து தாய், சேய் விபூஷிகாவுடன் இணைய வேண்டுமென எத்தனையோ சொல் வீச்சுக்கள் இடம்பெற்றன. இன்று விடுதலையான தாய், தனது மகளினை மீளவும், சிறுவர் இல்லத்தில் சேர்ப்பித்துள்ளார். போரில் இருந்து மீண்டவர்கள் உண்மை துயர நிலவரம் இதுவே.

Share on FacebookTweet about this on TwitterShare on LinkedInShare on Google+Print this page