காணாமல் போனவர்களின் தாய்-தந்தை-உறவினர்களின் துயர அவலத்தினுள் மறைந்திருந்து இலாபம் தேடும் தமிழ் அரசியல் குண்டர்கள்
– க. திருக்குமாரன் உலகப் பெரும்பரப்பில் சர்வதேச ஒழுங்கமைப்பின் ஊடாக ஈழத் தமிழர் விவகாரம் இன்று பயணிக்கிறது. இந்த நோக்குதலை வேண்டியே பல தசாப்தங்களாக தமிழர் முன்னெடுப்புக்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் தமிழர் மீதான “67 ஆண்டு கால” சிறிலங்கா அரசினது கொடும் பிடி நிலை தான் இன்னும் தொடர்கின்றது என்ற வாதம் சரியானதல்ல. கால ஓட்டத்தில் பூகோள-சமூக-அரசியல் மாற்றங்களின் நடுவே தலைமுறைகளும் புதியனவற்றை தழுவுகின்றன. இந்தச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பல இலட்ச …