காணாமல் போனவர்களின் தாய்-தந்தை-உறவினர்களின் துயர அவலத்தினுள் மறைந்திருந்து இலாபம் தேடும் தமிழ் அரசியல் குண்டர்கள்

– க. திருக்குமாரன்

உலகப் பெரும்பரப்பில் சர்வதேச ஒழுங்கமைப்பின் ஊடாக ஈழத் தமிழர் விவகாரம் இன்று பயணிக்கிறது. இந்த நோக்குதலை வேண்டியே பல தசாப்தங்களாக தமிழர் முன்னெடுப்புக்கள் இருந்து வந்துள்ளன.

ஆனால் தமிழர் மீதான “67 ஆண்டு கால” சிறிலங்கா அரசினது கொடும் பிடி நிலை தான் இன்னும் தொடர்கின்றது என்ற வாதம் சரியானதல்ல. கால ஓட்டத்தில் பூகோள-சமூக-அரசியல் மாற்றங்களின் நடுவே தலைமுறைகளும் புதியனவற்றை தழுவுகின்றன. இந்தச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பல இலட்ச ஈழத்தமிழர்கள், தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து, மேற்கு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகி விட்டனர்.

"நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"

“நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்”

புலம் பெயர்ந்த தமிழர்கள் இதயம் அன்றாடம் தாயக உறவுகளுக்காக துடிப்பினும், இரு தரப்பினரும் அன்றாடம் எதிர் கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகள் மிக பெரிதளவில் வேறுபட்டவை. கடந்த 67 இல் 32 ஆண்டுகளாக பயணித்து, இன்று புலம் பெயர் தேசங்களில் பொருளாதார, கல்வி வளங்கள் பல பெற்றுள்ள தமிழ் சமூகம் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரமும், வெறுமனே கடந்த 67 வருடங்களினைப் போன்றதே என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது.

இவ்வாறு மாற்றம் பெற்றுள்ள புதிய சூழலில் “67 ஆண்டுகாலப் பிடியில்” இன்னும் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு, “32 ஆண்டுகளுக்கு மேலாக அதன் பிடியில் இருந்து மீண்டு” வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் எப்படி உதவப் போகின்றார்கள், என்பதே இன்றைய புதிய நிலவரத்தினை ஒட்டிய எதிர்பார்ப்பு!

புலம் பெயர்ந்த தமிழர்கள் போல் அல்லாத அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் தாயக தமிழர் நிலையின உயர்த்துவதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் அளிக்கும் பங்களிப்பு எவ்வகையானது? அது போதுமானதாக இல்லை என்பது மட்டுமின்றி, இனப் படுகொலை, ஐ. நா விசாரணை என்று கூறிக் கொண்டு, தாயகத் தமிழர் தலையிலும், முதுகிலும் உலகளாவிய தமிழர்கள் அனைவரினதும் “தமிழ் தேசியம்” என்ற சுமையினை சுமத்தும் கைங்கரியமே இன்று முழு மூச்சுடன் இடம் பெறுகிறது.

“சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுதலாம்!”.

தாயகத் தமிழ் மக்கள் தொடர்ந்து அல்லல்படும் நிலைகள், அத்தோடு அது பற்றிய பழைய-புதிய படங்கள் இவை தமிழ் அரசியல் குணடர்கள் சிலருக்கு அவசியமானதாக உள்ளது.

இதன் நிமித்தே இன்று காணாமல் போன அன்னையரினதும், உறவுகளினதும் பின்னர் ஒளிந்திருந்து கொண்டு, புலம் பெயர்ந்த-மற்றும் உலகளாவிய தமிழர்களின் விருப்புக்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள தமிழ் அரசியல் தலைவர்களும், அதனூடான தமிழ் அரசியல் கருத்துருவாக்கமும் நிலையுற்றுவுற, தமிழ் அரசியல் குண்டர்கள் யாழிலும், எனைய வடக்கு-கிழக்கில் கூடவும் போராட்டம் நடாத்துகின்றனர்.

வெறும் வீதிப் போராட்டங்களினால் சர்வதேசமும் அதன் ஊடக மனித நேயமும் கண் திறக்குமாயிருந்தால், 2009இல் பல இலட்சம் தமிழர்கள் உலகின் முக்கிய நகரங்கள் எங்கினும் கடுங்குளிரிலும் அமைதிப் பேரணிகளில், ஐ:நா தலையீட்டினை கோரியபோது அது கை கூடி இருந்திருக்கும்.

இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அவ்வாறான அணிதிரள்கள் நடைபெறுவதில்லை. அதற்கு ஆயிரம் சாட்டுக்கள் சொல்லி விடலாம்.

மாறாக சிறிலங்கா அரசு, நாட்டினுள் கருத்துச் சுதந்திரம், அமைதிப் போராட்ட அனுமதி என்பன இப்போது உண்டு எனக் காட்டிடவும். ஐ:நா மேற்பார்வை இன்றியே உள்ளக விசாரணைகள் இடம் பெற்றுவிடலாம் எனச் சுட்டிக்காட்டிடவுமே தற்போதய வடக்கு-கிழக்கில் இடம் பெறும் “காணமற் போனோர் குறித்த நீதி” சம்பந்தப்பட்ட போராட்டங்கள் உதவுகின்றன.

இருப்பினும் தமிழ் அரசியலினை, அதன் தலைமையின தம் வசம் பெற்றிடவும், தமிழ் தேசியம் என்கின்ற சுமையினையும், ஐ:நா வில் பரப்புரை வேண்டுமெனக் கூறி தாய்மாரை ஆட்டுவிப்பதுமாகவே “காணாமற்போன உறவினர்களின் ஆர்ப்பாட்டம்” யாழ்ப்பாணத்திலும் எனைய வடக்கு-கிழக்கு பகுதிகளிலும் அரங்கேறுகிறது.

இந்த அரசியல் அடவடித்தனத்திற்கு அன்னையிரினை பயன் படுத்துவதில் அரசியல் குண்டர்களுடன், ஒரு சில பத்திரிகையாளர்களும், ஏன் சமய-பொதுத் தொண்டர்களும் சிலரும் தமிழ் அரசியல் குணடர்களுடன் கை கோர்த்துள்ளனர்.

உலகளாவிய தமிழர்களின் தமிழ் தேசிய வேட்கைக்காக காணாமல் போனவர்களின் தாய்-தந்தை-உறவினர்களின் துயர அவலத்தினுள் மறைந்திருந்து இலாபம் தேடும் தமிழ் அரசியல் குணடர்கள் தமது விசமங்களினை இத்துடன் நிறுத்தப் போவதில்லை.
இலங்கையில் வாழும் தமிழர்களினை அதல பாதாளத்தினுள் தள்ளி எழும்பவிடாது செய்வதில் தமிழ் அரசியல் குண்டர்கள் சிலர் தொடர்ந்து குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் எள்ளவும் இல்லை.

இந்த சுயநலத் தேசியத்தினைத்தான் மகாகவி சுப்பிரமணிய பாராதியார் “நெஞ்சு பொறுக்குதில்லையே” கவிதை வரிகளாக எழுதினார்:

சிதம்பரம் சி. எஸ். ஜெயராமன் பாடுவது – பராசக்தி திரைப்படத்தில்

‘நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார்”